என் அன்னை எப்படி பட்டவள் என்றால்.....1:
(நாமக்கல் மாவட்ட கொங்கு பாசை அடிப்படையில் எழுதிய என் அன்னை பற்றி வாழ்க்கை நிகழ்ச்சி)
ஒருத்தி மட்டுமே வாழ்ந்தா எனக்காக ஒருகாலத்துல... உசுருபூராம் என்மேலனால தரிசு பூராவும் தங்கமாச்சு... எனக்காக வாழ்ந்ததில் என்னதான் சுகமோ அவளுக்கு... என் மகனுக்காக வாழ்ந்து பொறவு சொல்லுரேன் சுகமென்னானு... ரெண்டாம் வவுப்பு படிக்கீல ரெண்டே ரெண்டு போண்டா வேனும்னு இருட்டு கட்ட நான் கேட்க.. மாவு இல்ல கண்ணு மாசம் போன கூலி வரும்;மாவு வாங்கி சுட்டு தாரேனு சொன்னா... மாசம் வர பொறுக்க முடியாது இப்பவே வேணும்னு அடம்புடிக்க அம்மாயி வீட்டுக்கு தடம் பார்த்து கொண்டிருந்தாள் தமக்கை ஒருத்தி. இன்னேரம் மாவு வாங்க இருட்டுக்குள்ள அதுவும் இந்த காட்டுக்குள்ள எங்க போவனு என்ன பெத்தவன் சமாதானம் சொல்லி கொண்டே இருக்க ; இருங்க ஒரு நிமிஷம் வாரேனு சட்டுனு கெளம்பி போய் கெழக்கால அப்பமூட்டுள சீமகருவேல காட்டுக்குள்ள சீமெண்ண லாந்துர கொண்டு சீதனமாக கடலமாவு வாங்க போனா செல்லம்மாக்கிட்ட(அவங்க அம்மாகிட்ட)... ஏபுள்ள இந்த நேரம்னு தங்கம்மாள(எங்கம்மாகிட்ட) கேட்க குன்னுடையான் கவண்டன்(என் அப்புச்சி தாத்தா) குறி பார்த்து கேட்டான் " புள்ள எதாவது புருசன் பொஞ்ஞாதி சண்டையானு ". இல்லப்பானு சொல்லி முடிக்க~ காய்கசுரு போட்டு காவி துணி மூடி பொறந்தவன்(என் மாமன்), சாக்கு பைல போட ... அட நான் வந்தது மறந்துருமேனு முந்தான சீலைல முடி போட்டது அவுத்து, தலைக்கு தேக்க நாலுகரண்டி கடலமாவு வேணும்னு கேட்டு காலைல கடன் கொடுத்துடரேன்னு சொல்லி ... நாலு தலைக்கு பத்தாது நாலுகரண்டி சேத்தே போட்டு கொடுனு கேட்கமுன்ன நங்கியாளுக்கு (கணவரின் அக்கா) அறைபாக்கெட் மாவு அல்லி கொடுத்தா மவராசி (என் மாமன் மனைவி)... வாங்கி வந்த வேகத்துல , புள்ள தூங்கிட்டா என்ன செய்யனு பதட்டத்துல , அள்ளி கொட்டி கலக்கீல மண்ணு கழந்து போச்சு... கொரவன்மொரத்துல பொடச்சும் கொஞ்சம்தான் மண்ணு போச்சு... சல்லடைல சலிச்சு ஏங்கல்லெடுப்பு கூட்டதான் அந்த மண்ணடுப்ப கூட்டுனா சண்டாளி... வடசட்டில சுட எண்ணெ பத்தாதே எதவெச்சு சுடனு யோசனைல வெங்காயம் அறிய; செவப்பு இரத்தம் பூர வெள்ள இரத்தமா வடிஞ்சுது என்ன பெத்தவ கண்ணுல... அம்மா அலாதமானு நான் சொல்ல நாளு வெங்காயம், மூனு கள்ளு உப்பு , ரெண்டு ரக்கு கரியபில்ல , ஒரு மொளவா போட்டு , கொளம்பு தாளிக்கும் கரண்டில அஞ்சு போண்டா சுட்டு மண்ணடுப்பு சூட்டுல மார்ழி மாச குளுருல வெதுவெதுப்பா கொடுத்தா கமலாஅம்மா... அக்காவுக்கு உனக்கு அப்பாவுக்கு? னு நான் கேட்க... விடிஞ்பொறவு அவங்களுக்கு சுட்டு தாரேனு சொல்லிட்டு, போனா கரண்டி கலுவ... ஏக்கா..? அம்மா எனக்கு மட்டும் சுட்டு தந்துனு நான் கேட்க, ஒருவேல விடியாமலே போய்டா என்ன செய்யனு சொன்னா அக்கா... அப்ப எல்லாரும் சாப்புடுங்கனு நான் சொல்ல ... நாங்க எல்லாம் முன்னவே கம்மஞ்சோறு கறைச்சி சின்ன வெங்காயம் கடிச்சி குடிச்சிட்டோம்...தம்பி மட்டுமே போண்டா வேணும்னு சாப்டுல...ராத்திரிக்கு ஆயாசாமி வந்து தம்பி வயித்த பாக்குமுனு சொல்லி அதனால வெறும் வயிறு வேண்டாமுனு மெரட்டி அஞ்சையும் திங்க வெச்சா சுமதிஅக்கா ... ஒரு மொளகா காரத்துல ஒருமணிநேரம் தூக்கம் வர்ல...ஒஞ்ஞிரிச்சு படுக்கையில ஒருசத்தம்.. என்னனு எட்டி பார்த்தேன்... தக்காளி பழம் கூடைல கட்டி அவர காய அடில கட்டி நாமக்கலு மார்கெட் போக சைக்கிள்ள காத்து அடிச்சு சாம கோழி கூப்பிடீல எலுப்பிவிடுனு சண்டைக்கு நின்னாறு எங்கப்பன் அதான் பழனியப்பன்.. காபிதூளு இல்லாம கருவெல்லம்போட்டு கொத்தமல்லி தண்ணிய வெச்சு கோளாறா எலுப்பி விட்டா எங்கம்மா கமலா... ஊருக்கு முன்னாடி வித்துப்புட்டு நேரங்காலமா வூடு வந்து சேருடா.. கள்ளு குடிக்க போய்டாத.. காட்டு கள்ளு ஊட்டுக்கே வரும்னு சொல்லி அனுப்பினா நல்லம்மா என்ற பாட்டி... மறக்காம கடலைமாவு வாங்கி வாங்க மகனுக்கு போண்டா போடனும்னு கெழக்காட்டு கிணத்தொறம் வரைக்கும் வண்டிதடம் குழி தாண்ட சைக்கிள்வண்டி தள்ளி வந்தா எங்கம்மா... பஞ்சாயத்து ரோட்டேரி பக்குவமா வாங்கி வாரேன பயப்படாம வீட்டுக்கு போனு பாலு பீச்ச நேரமாச்சுனு சொன்னாரு பழனியப்பன். நாலு கல்ல முட்டாயி நாலுபாக்கெட் கடலமாவு நமக்கு தானு வாங்கி வந்த எங்கப்பன் இப்பவே போண்டா வேண்டாம் பயன் அடம் புடிக்கிரண்ணக்கி சுட்டு குடுனு சொல்லிதான் குடுத்தாரு.. பொழுதான போண்டா வேனும்னு அடம் புடிச்சி போண்டா சுடவெச்சி எல்லார்த்தையும் போண்டா நான் திங்கவெச்சேன். மாவு தீர்ந்த பொறவு ஏஅடமும் தீர்ந்து போச்சு... எழுதாத இன்னும் ஒரு இலக்கணம் மண்ணுலகில் இருப்பின் அது எம்தாயும் என்குடும்பமும் மட்டுமே...
No comments:
Post a Comment